ஓபிஎஸ் சவால்!

Filed under: அரசியல் |

ஓபிஎஸ் முதலமைச்சர் முக ஸ்டாலினை ஓபிஎஸ் தனிமையில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இந்நிலையில் தான் முதல்வரைச் சந்தித்ததை பழனிச்சாமி நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் சவால் விட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஓபிஎச், ஈபிஎஸ் அணிகள் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூடிய சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் சட்டமன்றத்திலிருந்து வெளியேறிய எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் கட்சிக்கு துரோகம் செய்கிறார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தனிமையில் சந்தித்து அரை மணி நேரம் அவர் பேசியுள்ளார் என்றும் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் முதல¬¬ச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசியதை பழனிச்சாமி நிரூபிக்க தயாரா? என சவால் விட்டார். மேலும் இதை பழனிச்சாமி நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என்றும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் சவால் விட்டுள்ளார்.