ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு!

Filed under: அரசியல்,தமிழகம் |

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட மாட்டாது என்றும் அந்த தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கேபி முனுசாமி அறிவித்தார். ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒற்றை தலைமை உள்ளிட்ட புது தீர்மானங்கள் இயற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் 23 தீர்மானங்கள் ரத்து செய்ததாக இன்று அறிவிப்பு செய்தது தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிரானது என்று ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையத்தில் முறையிட போவதாக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.