முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில், “இறைவனின் தீர்ப்புக்காக சோதனையோடு பொறுமையுடன் போராடிக் கொண்டு காத்திருக்கின்றோம்.
காலைப் பிடித்து பதவி வாங்கி,
பதவி வாங்கி பணத்தை சேர்த்து,
சேர்த்த பணத்தால் கூட்டத்தை கூட்டி,
கூட்டத்தை வைத்து பதவி பெற
நீதியை நிதியால் வளைத்து,
பொய் சூழ்ச்சி வஞ்சகத்தோடு, ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி,
இரு பெரும் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த பேரியக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பதவிவெறி பிடித்த மனிதனே…
தற்போது நாங்கள் என்ன சொன்னாலும் தங்களது அறிவுக்கு ஏறாது. உங்களை சூழ்ந்து இருக்கும் பதவியும் பணமும் உங்களை விட்டு நீங்கும்போது உண்மை தன்மை புரியவரும்; தான் செய்தது தவறு என்று தெரிய வரும். அத்தகைய காலத்தினால் வழங்கப்படும் இறைவனின் தீர்ப்புக்காக சோதனைகளோடு போராடி பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்…..
கடை கோடி உண்மை தொண்டன்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.