ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

Filed under: அரசியல்,தமிழகம் |

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்ஜிஆர் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும் கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அப்பதவியில் இருந்து நியதிக்கு புறம்பாக நீக்கியும் கழக நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா அவர்கள் தான் என்ற விதியை மாற்றி அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளர் வரமுடியும் என்ற அடிப்படை விதியை மாற்றியதற்காகவும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் போலி பொதுக்குழுவை மே 1ம் தேதி முதல் கலைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதில் தெரிவித்துள்ளார். மேலும் புதிய பொழுகு பொதுக்குழு தேர்ந்தெடுக்கப்படும் வகையில் உண்மையான கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்றும் தனது அறிக்கைகள் தெரிவித்துள்ளார்.