ஓ மை கடவுளே இயக்குனர் புதிய திரைப்படம்!

Filed under: சினிமா |

கடந்த 2020ம் ஆண்டு அசோக் செல்வன், ரித்விகா மற்றும் வாணி போஜன் ஆகியவர்கள் நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் ரிலீசானது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் வெற்றியால் தெலுங்கில் தானே அந்த படத்தை ரீமேக் செய்துள்ளார் அஷ்வத் மாரிமுத்து. இதையடுத்து இதே படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் அஸ்வத் மாரிமுத்து. மேலும் விரைவில் இந்தியிலும் இதே படத்தை அவர் இயக்கவுள்ளார். இப்போது தமிழ் தெலுங்கில் உருவாகும் பேண்டஸி படத்தை தில் ராஜு தயாரிப்பில் இயக்கவுள்ளார் அஸ்வத். இந்த படத்தில் நடிக்க முன்னணி நடிகர்களோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.