ஔவை பாட்டிக்கு மணிமண்டபம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ரூபாய் 12 கோடி செலவில் ஔவை பாட்டிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஔவை பாட்டிக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான வரைபடம் தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்னும் சிறப்பாக டிசைன் செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியதையடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ஔவையார் என்றாலே ஆத்திச்சூடி தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் நிலையில் சங்க கால தமிழ் புலவர்களில் ஒருவரான ஔவையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படுவது பெருமைக்குரியது என அவர் தெரிவித்தார். ஔவையார் மணிமண்டபம் மிக விரைவில் திறக்கப்படும் என்றும் அதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.