‘கடமையை செய்’ ரிலீஸ் தேதி!

Filed under: சினிமா |

தற்போது சமீபத்தில் வெளியாகி ஹாட் ஆப் த டாப்பிக்காக பேசப்பட்ட திரைப்படம் “மாநாடு.” அதிலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு இன்னும் பேசப்பட்டு வருகிறது.

பல வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவின் மிகப்பெரிய இயக்குனராக இருந்தவர் எஸ்.ஜே. சூர்யா. நடிப்பில் ஆர்வம் அதிகமானதால் இயக்கத்தை விட்டு நடிகரானார். ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின் அவர் “இறைவி” படத்தின் மூலம் பழையபடி புல் பார்முக்கு வந்தார். இம்முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து நடித்தார். இப்போது அவர் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை, பொம்மை, இரவாக்காலம் உட்பட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்போது சிவகார்த்திகேயனின் “டான்” மற்றும் சிம்புவின் “மாநாடு” ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்தார்.

“முத்தின கத்திரிக்கா” படத்தின் இயக்குனர் வெங்கட் இயக்கும் “கடமையை செய்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் டிரெயிலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. படம் வரும் ஜூன் 24ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.