கணவனின் வெற்றியை கொண்டாடும் சமந்தா

Filed under: சினிமா |

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவை பிரிந்திருந்தாலும் அவருடன் நடித்த திரைப்படத்தின் வெற்றியை சமந்தா கொண்டாடுகிறார்.

கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் மஜ்லி. தெலுங்கில் உருவான இந்த திரைப்படத்தில் நாகசைதன்யா மற்றும் சமந்தா ஜோடியாக நடித்து இருந்தனர்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அல்லாமல் வசூலை வாரி குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளியான இந்தப் படம் இன்றுடன் 3 ஆண்டுகள் முடிவடைகிறது.
இதனை அடுத்து “இந்த படத்தின் மூன்று ஆண்டு விழாவை கொண்டாடுகிறேன்” என்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
நாக சைதன்யாவை பிரிந்தாலும் அவருடன் நடித்த படத்தின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.