கனமழை அலெர்ட்?

Filed under: தமிழகம் |

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் வங்க கடலில் உருவான புயல் சின்னம் இலங்கையில் கரையை கடந்த நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த நாட்களில் தென் மாவட்டங்கள், டெல்டா பாசன பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.