கருணாநிதிக்கு நினைவுச் சின்னத்திற்கு ஒப்புதல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை மண்டல ஆணையம் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தற்போதைய திமுக அரசு திட்டமிட்டுள்ளதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சிலை வைப்பது குறித்து பல்வேறு அரசியல் கட்சியை தலைவர்கள் நிர்வாகிகள் சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு அறிக்கை ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.