‘கருணாநிதி நாடு’ மாற்றுவாரா ஸ்டாலின்: ஆர்.பி. உதயகுமார்

Filed under: அரசியல்,தமிழகம் |

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தமிழ்நாட்டுக்கு “கருணாநிதி நாடு” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயர் சூட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி 69வது பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய அவர் “மதுரையில் நூலகத்துக்கு கருணாநிதியின் பெயரை வைக்கிறார், சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர், தற்போது கிண்டியில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கும் கருணாநிதி பெயர் இப்படியே போனால் தமிழ்நாடு, கருணாநிதி நாடு என்று மாற்றவும் வாய்ப்பு இருக்கிறது. கருணாநிதி பெயரை மட்டுமின்றி மற்ற தலைவர்களின் பெயர்களையும் கட்டிடங்களுக்கு வைக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.