கர்ணனனாக நடிக்கும் சூர்யா?

Filed under: சினிமா |

நடிகர் சூர்யாவின் நடிப்பில், “சூரரைப் போற்று,” “ஜெய்பீம்,” “எதற்கும் துணிந்தவன்” ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடித்து வரும் படம் “கங்குவா.”

இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவன் கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் யோகி பாபு, திஷா பத்தானி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூர்யாவின் 44வது படம் பற்றிய தகவல் வெளியாகவுள்ளது. இப்படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா இயக்கவுள்ளதாகவும், இப்படத்தின் மூலம் சூர்யா இந்தியில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படம் மகாபாரத சரித்திர கதையை அடிப்படையில் உருவாகவுள்ளதாகவும், இப்படத்திற்கு “கர்ணன்” என்று பெயரிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.