கர்நாடக தேர்தலில் கமல்ஹாசன் ஆதரவு யாருக்கு?

Filed under: அரசியல்,இந்தியா |

வரும் 10ம் தேதி கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக பிரபலங்களும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரபலங்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவு என தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், கர்நாடகா மாநிலத்திலுள்ள தனது ரசிகர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள். இறையாண்மைக்கு ஆபத்து என்று யார் அழைத்தாலும் செல்வேன். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு ராகுல் காந்தி என்னிடம் கேட்டுக் கொண்டதால் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்குவேன். மக்களவைத் தேர்தலில் நல்ல முடிவு ஏற்பட இப்போது இருந்து வேலை செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.