கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலா பால்!

Filed under: சினிமா |

நடிகை அமலா பால் உள்ளிட்ட 150 கர்ப்பிணிகள் கேரளாவில் நடந்த கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோவில் பங்கேற்றனர்.

கேரள மாநிலம் கொச்சியில் தனியார் மருத்துவமனை சார்பில் பெண்களின் மகப்பேறு காலத்தை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்கான ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை அமலா பால் கலந்து கொண்டார். 105 கர்ப்பிணிப் பெண்களும் இதில் கலந்து கொண்டனர். உலகளவில் அதிக கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ என்ற அங்கீகாரம் இந்நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது. நடிகை அமலாபால் கடந்த ஆண்டு காதலர் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமானார். தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.