“கலகலப்பு 3” படத்தில் கவின் நடிக்கிறாரா?

Filed under: சினிமா |

நடிகர் கவின் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் “கலகலப்பு” திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இச்செய்தியை சுந்தர் சி தரப்பு மறுத்துள்ளது.

“கலகலப்பு” மற்றும் “கலகலப்பு 2” ஆகிய இரண்டு படங்களும் சுந்தர் சி இயக்கத்தில் உருவானது.இத்திரைப்படங்கள் நல்ல வெற்றி பெற்றது. விரைவில் “கலகலப்பு 3” உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான கதையை சுந்தர் சி எழுதி முடித்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. “கலகலப்பு 3” திரைப்படத்தில் கவின் நடிக்க போவதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து சுந்தர் சி, “கலகலப்பு 3” படத்திற்கான நட்சத்திரங்கள் இன்னும் தேர்வாகவில்லை. இப்படத்தில் கவின் நடிப்பதாக ஊடகங்களில் வெளியாகி கொண்டிருக்கும் செய்தி அடிப்படை ஆதாரமற்றது. கவினிடம் நான் எந்த பேச்சு வார்த்தையில் நடத்தவில்லை” அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து “கலகலப்பு 3” திரைப்படத்தில் கவின் நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என்று உறுதியாகியுள்ளது.