கல்லணை பாலத்தில் போலி ரசீது மூலம் பணம் வசூல் – நெற்றிக்கண்ணால் ரவுடிகள் கைது!

Filed under: தமிழகம் |

Parkingதிருச்சியில் இருந்து கல்லணை வழியாக தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் வழியில் கல்லணைக்கு அருகில் தோகூர் என்னும் கிராமத்தை கடந்து செல்லும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடமும், சுற்றுலா பயணிகளிடமும் நுழைவு கட்டணம் என்ற பெயரில் தலா 20 ரூபாய், 30 ரூபாய், 40 ரூபாய் மற்றும் 50 ரூபாய் என அராஜக வசூல் நடைபெறுவதாகவும் இதை எதிர்த்து கேள்விகேட்கும். வாகன ஓட்டிகளை மிரட்டுவதாகவும், நம் நெற்றிக்கண் குழுவிற்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து நாம் தீவிர விசாரணையில் இறங்கிய சிறிது நேரத்திலேயே இந்த வசூலில் சம்மந்தப்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டதோடு இதன் பின்னணியாக செயல்பட்ட ஊராட்சிமன்ற தலைவி மற்றும் அவரது கணவர் உட்பட நான்குபேர் மீதும் வழக்கு பதிவு செய்து உள்ளனர் தோகூர் காவல் நிலைய அதிகாரிகள்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த துரித செயல்பாட்டை பொதுமக்கள் பாராட்டினாலும் மறுபுறம் ஏன் இவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறும் இந்த வசூலை தடுக்கவில்லை? என்ற கேள்வியும் மக்களுக்கு எழாமல் இல்லை!
எது எப்படியோ இதுபோன்ற போலி வசூல்கள் இந்த பகுதியில் நடைபெறாமல் தடுத்தால் சரி!
-ராமு