ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு பிரபல நடிகை மிருணாளினியை கரம் பிடிக்க இருக்கிறார். நடிகை மிருணாளினி, தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மிருணாளினி ரவி. அதைத்தொடர்ந்து, ‘சாம்பியன்’ படத்தில் நாயகி ஆனார். விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான ‘எனிமி’, ‘எம்ஜிஆர் […]

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற தமிழக தடகள வீரர்கள் பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபு ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் முதல்வர் விஜய். முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு எனது மனமார்ந்த […]
Continue reading …
ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, […]
Continue reading …
சென்னை, சேப்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். சென்னையில் கனமழை பெய்தது, அமைச்சர்கள் துவங்கி, எம்.எல்.ஏ.,க்கள் கவுன்சிலர்கள் வரை களத்தில் இறங்கி, அனைத்து விதமான பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். இப்போது மழை லேசாகத்தான் பெய்துள்ளது. கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. கனமழையில் கூட சென்னையில் எங்கும் தண்ணீர் […]
Continue reading …
தமிழர் திருநாள் கொண்டாடுவோம் – தமிழர்களின் வாழ்வுரிமைக் காக்க உறுதி ஏற்போம்! பொங்கலாய், தமிழர் திருநாளாய், உழவர் பெருநாளாய், புத்தாண்டுப் பிறப்பாய் புதிது புதிதாய் வளர்ந்து வரும் தைத்திருநாளை கொண்டாடி மகிழும் எமது தமிழ் சொந்தங்களுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழறிஞர்களாலும், அண்ணா, ம.பொ.சி. ஆதித்தனார் போன்ற அரசியல் தலைவர்களாலும், தமிழர் திருநாள் என்று அழைக்கப்பட்ட பொங்கல் விழாவை, உலகெங்கும் நிறைந்திருக்கும் தமிழர்கள் இன்று கொண்டாடி வருகிறோம். உழவுத் தொழில் […]
Continue reading …
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளில் சுட்டிக்காட்டப்பட்ட சில குறைகள் சரி செய்யப்படாததைத் தொடர்ந்து அவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை கடுமையானது; அளவுக்கு அதிகமானது; தேவையற்றது ஆகும். தமிழ்நாட்டின் 3 அரசு மருத்துவக் […]
Continue reading …
சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.4) திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். திருமணத்தை நடத்திவைத்து முதல்வர் பேசியது : இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 31 இணையர்களுக்கு திருமணத்தை செய்து வைக்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது உள்ளபடியே பெருமையாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது, எனக்கு மனநிறைவையும் தந்து கொண்டிருக்கிறது. […]
Continue reading …
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக, விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் நாங்கள் அம்மா அப்பா ஆகி விட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Continue reading …
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அரிய வகை விலங்குகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் இப்பகுதியில் அடிக்கடி சட்ட விரோதமாக விலங்குகளை வேட்டையாடுதல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தேனி வனச்சரக வனத்துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் சட்ட விரோதமாக வேட்டையாடுவர்களை பற்றி விவரங்கள் சேகரித்து வந்தனர். இந்த சூழலில் இன்று அதிகாலை போடி அருகில் உள்ள உலக்குருட்டி சாலை பகுதியில் வெடி […]
Continue reading …
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக, காவல்துறையினர் நடத்திய இரண்டாம் கட்ட கஞ்சா ஒழிப்பு சோதனையில் 2,423 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சாவும், 6,319 குட்கா வணிகர்கள் கைது செய்யப்பட்டு 44.90 டன் குட்காவும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறை களமிறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த நடவடிக்கை போதுமானது அல்ல. கல்விக்கும், தொன்மைக்கும் புகழ் பெற்ற தமிழ்நாடு இப்போது கஞ்சா, அபின் உள்ளிட்ட […]
Continue reading …