கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட விடுதி!

Filed under: தமிழகம் |

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி திடீரென மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவியின் மரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி பள்ளி குறித்து விசாரணை செய்தபோது பள்ளியில் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்று நடத்தப்பட்டு வருவதாகவும் அதில் 24 மாணவிகளை தங்க வைத்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் முறையிடுவோம் என மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி சின்னசேலம் தனியார் பள்ளி விடுதி உரிய அனுமதியின்றி இயங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.