கள்ள லாட்டரி, கந்துவட்டி வசூலில் ஆத்தூரை அலறவிடும் தி.மு.க. கண்ணன்!

Filed under: தமிழகம் |

சேலம் சிவா

சேலம் : சேலம் மாவட்டம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமேயில்லை என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படு ஜோராக நடக்கும் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையும் அநியாய கந்து வட்டி வசூலும். இது தொடர்பாக போலீஸாருக்கு பெட்டிஷன் அனுப்பினாலோ, தகவல் சொன்னாலோ நடவடிக்கை என்ற பெயரில் கமிஷனை உயர்த்திக் கொண்டு, தகவல் சொன்னவரையே மிரட்டும் அவல நிலைக்கு ஆத்தூர் உள்ளது என பொதுநல ஆர்வலர்களின் பெரும் புலம்பலாகவே உள்ளது.

கண்ணன்

ஆன்மிக பூமியாகவும், அமைதி பூங்காவாகவும் உள்ள ஆத்தூர் பகுதி கல்வராயன் மலை சாரலில் அழகாக காட்சியளித்தாலும் உள்ளே புகுந்து பார்க்கும்போது, வெளியே தெரியாமல் பல அராஜகங்கள் அரங்கேறிக் கொண்டுள்ளன என்கின்றனர் பொதுநல விரும்பிகள் பலரும். செல்லியம்பாளையம், அம்மம்பாளையம், நரசிங்கபுரம், விநாயகபுரம், உடையார்பாளையம் செட்டியார் டீ கடை, காந்திசிலை அருகே மணி டீ கடை, மணிக்கூண்டு அருகில் உள்ள செல் ஷாப், முல்லைவாடி, புதுப்பேட்டை உழவர்சந்தை அருகில் 3 டீ கடைகளில், பஸ் ஸ்டேண்ட் என்.எஸ். தியேட்டர் அருகில் பஸ் ஸ்டேண்டிலுள்ள 10க்கும் மேற்பட்ட டீ மற்றும் செல்போன் ரீசார்ச் கடைகளில், காட்டுக்கோட்டை, வடசென்னிமலை கோவில் அடிவாரம், விரகனூர் பிரிவு, வீரகனூர் பேருந்து நிலையம், கெங்கவல்லி கடைவீதி, பேருந்து நிலையம், தியேட்டர் ஸ்டாப்பு, தம்மம்பட்டி பேருந்து நிலையம் மற்றும் யூனியன் ஆபிஸ் அருகில் என லாட்டரி விற்பனை செய்யப்படும் இடங்களின் பட்டியல் நீளுகிறது.

இப்படியாக பட்டியல் நீண்டாலும் லாட்டரி ஓனராக தி.மு.க.வின் கண்ணன் தான் டாப்பாம். ஆளும் கட்சி பிரமுகர்களையே ஓரம்கட்டி லாட்டரி தொழிலில் ஆத்தூர் பகுதியில் கொடிகட்டி பறக்கிறாராம் இந்த கண்ணன். இவரின் மனைவி மணிமேகலை கடந்த முறை ஆத்தூரில் தே.மு.தி.க. கவுன்சிலராம். இப்படி தி.மு.க., தே.மு.தி.க. என இரு கட்சி அறிமுகங்களுடன் ஆளும்கட்சியினருடனும், எதிர் கட்சியினருடனும் அன்கோ போட்டுக்கொண்டு கள்ள லாட்டரியை நடத்தி வருகிறாராம்.

போலீஸ் கெடுபிடி கொடுக்கும் போதெல்லாம் ரன்னிங்கில் அதாவது அதிகாலை 6 மணி முதல் ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்தை பிக்ஸ் பண்ணி லாட்டரியை ஓட்டுவாராம். இது மட்டுமல்ல இவரே 3 சிஸ்டம் போட்டு குலுக்கலை நடத்துகிறாராம். கடந்த சில மாதங்களாக ஆளும்கட்சி பிரமுகர்கள் பலரின் கலெக்ஷன் கெடுபிடியால் தற்போது ரன்னிங்கில் மட்டுமே ஆட்களை வைத்து லாட்டரி விற்கிறாராம். இப்படி இவரிடம் 80 பேர் ரெகுலரா வேலை செய்கிறார்களாம். எந்த ஆட்சியாக இருந்தாலும் எந்த எஸ்.பி., டி.எஸ்.பி. இன்ஸாக இருந்தாலும் இவருக்கு கை கொடுப்பது இந்த ரன்னிங், வின்னிங் டெக்னிக்தான் என்கின்றனர். மேலும் போலீஸ் நடவடிக்கை எடுத்தாலும் இந்த கண்ணன் எஸ்கேப். லேபர் ஒன்லி லாக்கப் என்கின்றனர்.

இது ஒருபுறமெனில் கண்ணனின் கந்து வட்டி பிசினஸ்ஸோ வெரி சீக்ரெட். பெரிய நில அதிபர்களை, அதுவும் ஆதரவற்றவர்களாக தேர்வு செய்து, கேட்கும் தொகையைவிட அதிக தொகையை கொடுத்து இனிக்க, இனிக்க பேசி கடன் வாங்கியபின் போலீஸ் முதல் போக்கிரிகள் வரை தன் வசமுள்ளவர்களின் மூலம் நெருக்கடிகளை கொடுத்து நிலத்தை பிடுங்குவது இவரின் தனி ஸ்டைலாம். இப்படி இவரின் தற்போதைய சொத்து மதிப்பு பல கோடிகளைத் தாண்டும்.
இவரின் இந்த கந்து வட்டி கலெக்ஷனைப் பற்றி யார் புகார் கொடுத்தாலும் தன்னிடம் கலெக்ஷனை வாங்கும் காக்கிகளை வைத்து மிரட்டி பைசல் செய்து விடுவாராம். இதற்கு டி.எஸ்.பி. ராஜி தலைமையிலான தனி ஸ்பெசல் டீமே கண்ணனுக்கு சப்போர்ட்டாக வேலை செய்வதாக புலம்புகின்றனர் பொது மக்கள்.
கண்முன்னே கள்ள லாட்டரி விற்பனை, கந்து வட்டி வசூல் என கொடி கட்டிப்பறக்கும் கண்ணன் மீது இன்றுவரை எந்த புகாரும் நிலுவையில் இல்லை என்று சொல்வதிலிருந்தே கண்ணனின் கரன்சி சாம்ராஜ்யத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர் பொதுமக்கள் பலரும்!