காங்கிரஸில் இணைந்த பிரபல நடிகை!

Filed under: அரசியல்,இந்தியா,சினிமா |

இன்று நடிகை விஜயசாந்தி சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகினார். தற்போது தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸில் இணைந்தார்.

தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். விரைவில் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் எம்பி,., விஜயசாந்தி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. ‘பாரதிய ராஷ்டிரிய சமிதியிடம் இருந்து தெலங்கானா மக்களை காங்கிரஸ் தான் காப்பாற்ற வேண்டும்’ என சமீபத்தில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான விஜயசாந்தி இன்று அக்கட்சியிலிருந்து விலகி இன்று மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் இணைந்தார்.