காதலர் தினத்தில், ‘பொன்னியின் செல்வன் 2’ புரமோஷன்?

Filed under: சினிமா |

கடந்த ஆண்டு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. வரும் ஏப்ரல் 28ம் தேதி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் நிறைவு கட்டத்திற்கு வந்துள்ளது. புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக வரும் 14ம் தேதி காதலர் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த சிங்கிள் பாடல் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. ராஜராஜ சோழன் மற்றும் வானதி ஆகிய இருவருக்குமான ரொமான்ஸ் பாடல் இது என்றும் இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மானே பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இனி அடுத்தடுத்து “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் புரமோஷன் அடுத்தடுத்து தொடங்கும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரனின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.