காதல் வலியை அனுபவிக்கும் தயாரிப்பாளர் தங்கர்பச்சான்!

Filed under: சினிமா |

thanaகாதலில் விழுந்து மீண்டுவிட முடியாமல் சிக்குண்ட இதயம் போலத்தான் ‘களவாடிய பொழுதுகள்’ படத்தை தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை வேதனையோடும் வலியோடும் வெளியில் சொல்லமுடியாமல் துடியாய்த் துடித்துக்கொண்டிருப்பதாய் தங்கர்பச்சான் வருத்தப்பட்டார்.
ஒரு கலைஞனிடமிருந்து நீண்ட வலிகளுக்குப் பின்தான் சிறந்த படைப்புகள் (படம்) உருவாக்கமுடியும் என்றால் அந்தப் படைப்புக்கள் இனி எனக்கு வேண்டாம். காதலர்களை களவாடிய பொழுதுகள் களவாடும் என்றும் உறுதியுடன் சொன்னார், தங்கர்பச்சான். பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா ஆகியோரின் நடிப்பில் வைரமுத்து பாடல்களுக்கு பரத்வாஜ் இசையமைக்கிறார். கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.