“காபி வித் காதல்”

Filed under: சினிமா |

“காபி வித் காதல்” திரைப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக சுந்தர் சி பேய் படங்களாகவே இயக்கி வந்தார். இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. இப்போது சுந்தர் சி மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ளார். ஆமாம், ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில் யோகி பாபு, திவ்யதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நிறைவுற்றுள்ளது. படத்துக்கு ‘காபி வித் காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாகவுள்ளது. “வின்னர்” படத்துக்கு பிறகு 19 ஆண்டுகளுக்குப் பின் யுவன் ஷங்கர் ராஜாவும் சுந்தர் சியும் கூட்டணி சேர்ந்துள்ளனர். தற்போது படத்துக்கான பின்னணி இசைக் கோர்வையை முடித்துள்ளாராம் யுவன்.