காமராசரை பற்றி தரக்குறைவாக பேசிய கருணாசுக்கு எதிர்ப்பு!

Filed under: சினிமா |

chandamama_13578890048சிரிப்பு நடிகர் கருணாஸ் நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. தயாரித்த படங்களும் ஊத்திக்கொண்டதால், வேறு வழியில்லாமல் சாதி சங்கத்தில் அடைக்கலம் புகுந்து விட்டார் போலும். சமீபத்தில் பெருந்தலைவர் காமராசரைப்பற்றி அவதூறாக ஒரு வாரப்பத்திரிகையில் பேட்டியளித்திருப்பதால், காமராசரின் தொண்டர்கள் கருணாஸ் மீது கடுப்பில் உள்ளனர். கருணாசைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டியதுடன் கருணாஸ் மன்னிப்பு கேட்கும்வரை கருணாஸ் படங்களை திரையிட மாட்டோம் என்று மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். கருணாஸ் மனைவி எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்? கலப்பு காதல் மணம் புரிந்த கருணாசுக்கு எதற்காக இந்த சாதிப்பித்து?
உண்மை என்னதெரியுமா? கருணாஸ் பிறப்பில் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர் அல்ல. பிறப்பால் சக்கிலியர் (தாழ்த்தப்பட்டவர்) கருணாசை பாவப்பட்டு வளர்த்தவர் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர். தைரியமும் துணிச்சலும் இருந்தால் கருணாஸ் தனது பிறப்பு சான்றிதழைக் காட்டட்டும் என்று சவால் விட்டார், அவரை வைத்து படம் தயாரித்து இயக்கி பல கோடி கடனாளியாகி அவதிப்படும் சக்தி சிதம்பரம்.