காமெடி நடிகருக்கு விருது!

Filed under: சினிமா |

“ஜெர்ரி” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சதீஸ். ஏ.எல்.விஜய்யின் “மதராசப்பட்டினம்,” “பைரவா” என பல படங்களில் நடித்துள்ளார். இவர் “நாய் சேகர்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

ரசிகர்களிடம் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் ஹிரோவாக நடித்ததற்காக சதீஸுக்கு அறிமுக ஹீரோவுக்கான விருதை ஒரு தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த விருதுடன் நடிகர் சதீஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தைப் பதிவிட்டு, “நாய் சேகர்” பட இயக்குனருக்கும், இப்படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.