கார்த்திகா உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார்

Filed under: சினிமா |

PURAMPOKKU-ENGLISH-TITLEகார்த்திகா உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார்   புறம்போக்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை  குலு மணாலியில் முடித்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக  ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூர் செல்லும் கார்த்திகா .

‘ குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாக கடந்தது. மறக்க முடியாததாக இருந்தது. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் கரடு முரடானது .action காட்சிகளில் சோபிக்க இடம் உள்ள கதாபாத்திரம் . இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் வீடியோ கேம் மூலம் பிரசித்தி பெற்ற வீராங்கனை லாரா க்ராப்டை சார்ந்து இருக்கும் . இதை தவிர நான் ஆடியிருக்கும் டேப் டான்ஸ் எனக்கு நடனத்திலும் சோபிக்க கூடியவர் என்ற பெயரை ஈன்று தரும் . என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்பளித்த இயக்குனர் ஜனநாதனுக்கு என் உள மார்ந்த நன்றிகள். அவர் என் பார்வையில் ஒரு சரித்திர பேராசிரியராக தோன்றுகிறார் . அவரது உலக அறிவு அபரிதமானது ….வியப்புக்குரியது. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷ்யாம் , ஆகியோருடன் நடிக்க , ஜனநாதனின் இயக்கத்தில் யூ டி வி motion pictures தயாரிப்பில் நடிப்பது மிகவும் பெருமையான ஒன்று’  என கூறினார் .