கார்த்தி – சூர்யாவுக்கு விலையுயர்ந்த பரிசு!

Filed under: சினிமா |

தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் “விருமன்” திரைப்படத்தை வெளியிட்டது.

கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அன்று இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள “விருமன்” திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உட்பட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக கலக்கி வருகிறது. படம் வெளியாகி முதல் வார இறுதியில் மட்டும் வசூல் 30 கோடியை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் இத்திரைப்படம் 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையுமென தெரிகிறது. கார்த்தி நடித்த படங்களிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்த படமாக “விருமன்” அமைந்துள்ளது. இந்த வசூல் சீராக சென்றால் “கைதி” வசூலை முறியடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்பாராத அளவுக்கு வெற்றி பெற்றதையடுத்து படத்தின் வெற்றி விழாவில் விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனர் சக்திவேல் படத்தின் கதாநாயகன் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு வைர பிரேஸ்லெட் அளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.