கிரிக்கெட் விளையாடிய யோகிபாபு!

Filed under: சினிமா |

நடிகர் யோகி பாபு சேலத்தில் நடராஜனின் மைதானத்தை இன்று திறந்து வைத்தார். அப்போது யோகி பாபு கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடராஜன் என்பவர் சேலம் அருகே சின்னப்பம்பட்டி ஊரைச் சேர்ந்தவர். அவர் தனது கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த மைதானத்தை தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். இந்த மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்த பிறகு அதில் கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், நடராஜன் உள்ளிட்டோர் விளையாடினார். அவர்களுடன் நடிகர் யோகி பாபு, விஜய் டிவி புகழ் உள்ளிட்ட ஒரு சிலரும் கிரிக்கெட் விளையாடினார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.