குரங்கு அம்மை நோய் மிக வேகமாக இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் பரவி வருகிறது. குரங்கு அம்மை நோய்க்கு குரங்குகள் தான் காரணம் என நினைத்து பல பொதுமக்கள் குரங்குகளை கொன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. புதிய பெயரை இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1958ம் ஆண்டு டென்மார்க் நாட்டில் தான் முதல் முதலாக குரங்கு வைரஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த நோய் காரணமாக ஏராளமான குரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பல குரங்குகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது குரங்குகளின் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்காக இந்நோயின் பெயரை மாற்ற உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது.