குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை கேரளாவில் உயர்வு!

Filed under: இந்தியா |

ஏற்கனவே குரங்கு அம்மையால் கேரளாவில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் முதலாக கேரளாவில் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்நோயின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து கேரளாவில் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையடுத்து கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மக்கள் மத்தியில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.