குற்றாலத்தில் பயணிகள் குளிக்க தடை!

Filed under: தமிழகம் |

சுற்றுலாத் தளமான குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இந்த நிலையில் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்ததை அடுத்து நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் மெயின் அருவி தவிர பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.