முதல்வர் ஜெயலலிதா மீது நீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகளை அரசியல் சதியில் சிக்கிய முக்கிய நிகழ்வாக குறிப்பிடுகிறார்கள்! அ.தி.மு.க. தலைவியின் எழுச்சி கட்சியான உறுதியான பிடிப்பு, தமிழ் குலத்திற்கு துணிந்து எடுக்கும் முடிவுகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் இலங்கை பிரச்னையில் அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள், இலங்கை அதிபருக்கு அரசியல் வாழ்வை முறிக்கும் செயலாக தெரிந்ததாம். இதனால் அ.தி.மு.க. தலைவிக்கு எதிராக சதிதிட்டம் தீட்டப்பட்டு, அ.தி.மு.க.வின் சுயநல அரசியல்வாதிகளையும் பேராசை கொண்ட அதிகாரிகளையும் நிதிகளால் பிளந்து, அ.தி.மு.க. தலைவியை தனிமைப்படுத்தும் திட்டம் செயலாற்றப்பட்டது.
அடிக்கடி உணர்ச்சிவசப்படும் அ.தி.மு.க. தலைவியின் நடைமுறைகள், சதிகாரர்களுக்கு எளிதாக உதவியதாகக் கூறுகிறார்களாம். மிகவும் புத்திசாலித்தனமான முறையில், அ.தி.மு.க. தலைவியின் உண்மையான விசுவாசிகளை அப்புறப்படுத்தி, வெற்றி கண்டனர். அ.தி.மு.க. தலைவியின் கோப உணர்ச்சிகள் உண்மை விசுவாசிகளை அடையாளம் காண மறுத்ததாகக் கூறுகிறார்கள். நம்முடைய நெற்றிக்கண் வார இதழில் நமக்கு கிடைத்த உறுதியான தகவல்களை செய்தியாக வெளியிட்டு, அ.தி.மு.க. தலைவிக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளோம். ஆனால் விசுவாசிகளுக்கு எட்டாத கனியாக அ.தி.மு.க. தலைவியை நிறுத்தி உள்ளதாக அ.தி.மு.க. தொண்டர்கள் குமுறுகிறார்கள். அ.தி.மு.க. தலைவியின் வழக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே மிகத்திறமையான கிரிமினல் வழக்கறிஞர்கள் மூலம் சுமூகமாக முடித்திருக்கவேண்டிய அளவில் இருந்தது. ஆனால் அ.தி.மு.க. தலைவியின் உள்வட்டாரங்கள் கட்சி விசுவாசிகளை வழக்கறிஞர்களாக நியமித்து அ.தி.மு.க. தலைவிக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளார்களாம்.
ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரு பொறுப்புள்ள ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பாக இல்லை என்று தலைநகர அனுபவ வழக்கறிஞர்கள் விவாதிக்கிறார்கள். ஜெயலலிதாவின் எழுச்சியை தடுக்க அரசியல்வாதிகள் (தமிழகம் உட்பட) மற்றும் தமிழக அறிவாளிகளின் கூட்டுச்சதி என்று வெளியாகி உள்ளது. நீதிபதி விதித்த அபராதத்தொகை தற்போது தீவிர விவாதத்தில் வழக்கறிஞர்களிடையே உள்ளது. தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு நேர்மையான நீதிபதிக்கு அறிவுரை கூறி இருக்கலாமோ? என்ற சந்தேகம் பல கோணங்களில் வெளியாகி உள்ளதாக வதந்திகள் பரவுகின்றன.
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு நீதிமன்றங்களால் விலக்கு அளிக்கப்படும் சூழ்நிலையும் உள்ளதாகக் கூறுகிறார்கள். பல வழக்குகளில், கொலை வழக்குகளில் ஈடுபட்டவர்கள் கூட விடுதலை செய்யப்பட்ட நிகழ்வுகள் உள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்கள்.பா.ஜ.க.வை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிகழ்வினை சுட்டிக்காட்டுகிறார்கள். இது தெரியாத தமிழக பா.ஜ.க. தலைமையின் அ.தி.மு.க. தலைவி பற்றிய பேட்டி அரசியல் அறியாமையை எடுத்துக்காட்டுகிறதாம். அரசியல் சதியில் பிண்ணப்பட்ட வழக்கில் சிக்கி, தன்னுடைய ஆதரவாளர்களாலேயே தனித்து விடப்பட்ட அரசியல்வாதியாக ஜெயலலிதாவை சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும் ஜெயலலிதா மீது வழங்கப்பட்ட தீர்ப்பு இந்திய அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியை கரைத்து உள்ளதாம். 66 கோடிக்கு 100 கோடி அபராதம் என்று வழங்கப்பட்ட தீர்ப்பு, ஒரு லட்சம் கோடிக்கு எந்த அளவில் வழங்கப்படலாம் என்ற கணக்கு இந்திய மக்களால் போடப்படுகிறதாம். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழக அனைத்து பெண்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறுகிறார்கள். தமிழகம் எங்கும் அனுதாப அலை ஜெயலலிதா மீது எழுந்துள்ளது. இதை புரிந்து கொண்ட தமிழக கட்சிகள், மிகவும் எச்சரிக்கையாக அறிக்கைகளை வெளியிட்டு உள்ளார்கள். பல எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்கூட தங்கள் எதிர்கால அரசியல் வாழ்விற்காக அ.தி.மு.க.வில் இணையும் படலம் விரைவில் ஏற்படக்கூடும் என்ற கருத்து உலவுகிறது.
தமிழக மீனவர்களை உயர்த்துவோம் என்று நாடகமாடிய தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தற்போது அவர்களது படகுகள் தினமும் கைப்பற்றப்படுவது கண்டு திகைக்கிறார்கள். தமிழருக்கு எதிராக சதிசெய்து இலங்கை அதிபருக்கு ஆதரவு கொடுக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள், தற்போது பிரதமர் மோடியின் இலங்கை கண்டிப்பு கண்டு திகைத்து நிற்கிறார்களாம். அ.தி.மு.க. தலைவியை சிக்கவைத்து வெற்றிகண்ட சுப்பிரமணிய சுவாமி, மற்ற வழக்குகளில் இதே வேகத்துடன் செயல்படுவாரா? என்ற பட்டிமன்றம் தலைநகரில் நடக்கிறது.
இலங்கை அதிபருக்கு ஆதரவான தமிழக கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக சுப்ரமணிய சுவாமி செயல்படுவாரா என்ற கேள்விக்குறியும் பலமாக எழுந்துள்ளது. பா.ஜ.க. தலைமை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படும் என்ற நம்பிக்கை அகில இந்திய பா.ஜ.க. தொண்டர்களிடையே உலவுகிறதாம். தமிழக பா.ஜ.க. தலைவர்களிடையே பல அரசியல் விவாதங்கள் அ.தி.மு.க. தலைவிக்கு ஆதரவாக எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு உலக தமிழர்களிடையே பலத்த அனுதாபத்தை பெற்றுள்ளது. மேலும் பிரதமர் மோடிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய சம்மனைக்கண்டு உலக வழக்கறிஞர்கள் நகைக்கிறார்கள். அரசியல் அறியாமை கொண்டு ஆணவ அரசியல் நடத்தும் சில இந்தியக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமருக்கும், ஜெயலலிதாவுக்கும் எதிராக நடத்திய நடவடிக்கைகள் தற்போது கேள்விக்குறியாக விவாதிக்கப்படுகிறது.
இந்திய அரசியல் சட்டம் விரிவாக நுண்ணிய சட்டவிதிகளை பல உட்பொருட்களுடன் வெளிப்படையாகக் கொண்டது அதனுடைய உட்பொருட்களை அறியாத வழக்கறிஞர்களின் ஆலோசனைகளின் விளைவே பல வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் தோல்வி அடைவதாகக் கூறப்படுகிறது.