கேன்ஸ் பட விழா! சிகப்பு கம்பள வரவேற்பு!

Filed under: உலகம்,சினிமா |

தற்போது பிரான்ஸ் நாட்டில் உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலகெங்கிலுமிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில், இந்த ஆண்டு இந்திய திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.

சிகப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில், கமல்ஹாசன், மாதவன், பா.ரஞ்சித், ஏ.ஆர்.ரஹ்மான், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, பூஜா ஹெக்டே, நவாசுதின் சித்திக், ஊர்வசி ரவ்துலா உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேன்ஸ் விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் “லே மஸ்க்“ திரைப்படம், மாதவன் இயக்கி உள்ள “ராக்கெட்ரி” படமும் திரையிடப்பட உள்ளது. இதைதவிர பா.இரஞ்சித்தின் “வெட்டுவம்“ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விழாவில் வெளியிடப்பட உள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள “விக்ரம்“ படத்தின் டிரெயிலர் திரையிடப்பட உள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஜூரியாக சென்றுள்ள நடிகை தீபிகா படுகோன் வித விதமான உடைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ள ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.