கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் குறித்து கேரள முதல்வரிடம் பிரதமர் பேச்சு!

Filed under: இந்தியா |

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு நிலவரம் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயனிடம், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கும் பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர்  வெளியிட்ட தொடர் சுட்டுரையில் கூறியிருப்பதாவது :

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு நிலவரம் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் ஆலோசித்தேன். காயம் அடைந்தவர்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் களத்தில் உள்ள அதிகாரிகள் உதவி வருகின்றனர். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பிரார்த்திக்கிறேன்.

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சிலர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு இரங்கல்கள் என்று பிரதமர் கூறியுள்ளார்.