கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி பொருளாதார ரீதியாகவும் மிகவும் சிரமப்பட்டோம். தற்போது ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை என்று நோய் தொற்று பரவி வருகிறது.
இந்நோய் உலகம் முழுதும் பரவ வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கேரளாவில் ஒருவருக்கு இந்த குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “குரங்கு அம்மை அறிகுறி தெரியும் நபர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் இருந்து வந்துள்ளளார். அவர் அங்கு குரங்கு அம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்துள்ளளார். அவரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியிருக்கிறோம். இதன் முடிவுகள் தெரிந்தபின் அவருக்கு தொற்று உள்ளதா என்பது தெரியும்” என்று கூறினார்.