கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துக்கு தடை – அதிர்ச்சி அளித்த ஆய்வு முடிவுகள்!

Filed under: அரசியல்,உலகம் |

கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துக்கு தடை – அதிர்ச்சி அளித்த ஆய்வு முடிவுகள்!

கொரோனா தொற்று இருப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தடை விதித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தைத்தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டி உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்நிலையில் இந்த வைரஸுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுவரை எந்தவொரு தடுப்பு மருந்தும் இல்லாத நிலையில் மலேரியாவுக்குக் கொடுக்கப்படும் ஹைராக்ஸி க்ளோரோகுயின் என்ற மருந்து நல்ல பலன் தருவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த மருந்தைப் பயன்படுத்தினால் இதய துடிப்பு அதிகமாதல் உள்ளிட்ட பல பக்கவிளைவுகள் உருவாகும் என மருத்துவர்களால் எச்சரித்தனர். ஆனாலும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் அந்த  நோயாளிகளுக்குக் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் இப்போது இந்த மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது. இதை WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பெறும் நோயாளிகள் மற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளை விட அதிக விகிதத்தில் இறந்து கொண்டிருப்பதாக மருத்துவ இதழான தி லான்செட் கடந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. பல நோயாளிகளிடம் நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த முடிவை வெளியிட்டுள்ளது.’ எனக் கூறியுள்ளார். இந்த செய்தியானது மக்களிடம் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.