கோபமான யோகி பாபு!

Filed under: சினிமா |

சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் “பொம்மை நாயகி” திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து இப்போது பிரபல நகைச்சுவை நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கும் “லக்கிமேன்” திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி ரிலீசாகிறது.

நேற்று நடைபெற்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யோகி பாபுவிடம் “நீங்கள் ஒழுங்காக ஷூட்டிங் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என்ற கேள்விக்கு, “நான் ஷூட்டிங் வராமல் எங்கே கொளுத்து வேலைக்கா போகப் போகிறேன். நான் கொடுத்த தேதிகளில் கரெக்டா ஷூட்டிங் வரேன். ஆனால் நீங்க பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ஷூட்டிங் வைக்கலன்னா நான் என்ன பண்ணுவேன்” எனக் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் “லக்கி மேன்” திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகள் ரிலீசாகி ரசிகர்களைக் கவர்ந்து படத்தைப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளன.