மீண்டும் “கோப்ரா” திரைப்படத்தின் படப்பிடிப்பின் பணிகள் தொடங்கியிருக்கிறது.
“கோப்ரா” திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதம் என சொல்லப்படுகிறது. இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக “கோப்ரா” உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்த கோப்ரா கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. இப்போது ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோப்ரா திரைப்படத்தின் டப்பிங் பணிகளை அடுத்த வாரம் முதல் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.