சக மாணவியின் பெற்றோர் செய்த கொடூம்!

Filed under: தமிழகம் |

மகளின் சக மாணவன் நன்றாக படிக்கும் காரணத்தால் விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ள பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

காரைக்காலில் வசித்து வரும் மாணவர் மணிகண்டன் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அதே வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவியைவிட மணிகண்டன் நன்றாகப் படித்து, அதிக மதிப்பெண் பெற்று வந்துள்ளார். ஆனால், மாணவியால் மணிகண்டனை படிப்பில் மீறமுடியவில்லை. இந்நிலையில், பள்ளி ஆண்டு விழா ஒத்திகையில் கலந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிய மணிகண்டன் வாந்தி, மயக்கத்துடன் கீழே விழுந்தார். அதன்பின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளனர். அங்கிருந்த சிசிடிவியில் சக மாணவியின் பெற்றோர் குளிர்பானம் தரும் காட்சிகள் இருந்தது. தன் மகளைவிட நன்றாகப் படிக்கும் மணிகண்டன் மீதான பொறாமையின் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது, இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.