சசிகலா ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவா?

Filed under: அரசியல்,தமிழகம் |

சசிகலா சட்டமன்றத்தில் ஏற்படும் மோதலை நான் எதிர்ப்பதால் ஓபிஎஸ்-க்கு ஆதரவு என்று கூற முடியாது என்று கூறியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை நேற்று சட்டமன்றத்தில் வரவேற்பதாக ஓபிஎஸ் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சசிகலா சட்டமன்றத்தில் “மக்களுக்காக மக்களின் பிரச்சனைக்காக எந்த தீர்மானம் வந்தாலும் அதை மக்களின் பிரதிநிதிகள் தாராளமாக பேசலாம், அவர் பேசக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அதே நேரத்தில் இவ்வாறு நான் சொல்வதால் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினார். ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது, நாங்கள் அதிமுகவில் உள்ள யாரையும் வித்தியாசம் பார்ப்பதில்லை. அதிமுகவில் உள்ள எல்லோரும் ஒருங்கிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் சந்திக்க வேண்டும். அப்போதுதான் திமுகவை வீழ்த்தி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சியை நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.