சசிகாந்த் செந்தில் சாதனை வெற்றி!

Filed under: அரசியல்,தமிழகம் |

காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றவர்.

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் போட்டியிட்டார். அவர் சுமார் 8 லட்சம் வாக்குகள் அதாவது 796956 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பாலகணபதி பெற்ற வாக்குகள் 224801 என்பது தேமுதிக நல்ல தம்பி பெற்ற வாக்குகள் 223904 என்பதும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் பெற்ற வாக்குகள் 120838. 572155 வாக்குகள் வித்தியாசத்தில் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் கண்டிப்பாக சசிதாந்த் செந்திலுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.