சட்டையை கழட்டிய நடிகர் சல்மான்கான்!

Filed under: சினிமா |

30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான்கான்.

தற்போது, “கிசி காகி சி கி பாய் ஜான்’’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பர்ஹாத் சம்ஜி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில், நடிகை பூஜா ஹெக்டே, ஷெஹ்னாஸ்க் கில், வெங்கடேஷ், பாலக் திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் தமிழில் அஜீத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான “வீரம்” திரைப்படத்தின் இந்தி ரீமேக். படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில், சல்மான்கான், பூஜா ஹெக்டே உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அப்போது, ரசிகர்கள், படத்தில், அவர் காட்டிய சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் கிராபிக்ஸ் காட்சிகள் என்று கூறி விமர்சித்தனர். உடனே அவர் சட்டையைக் கழட்டி இதைப் பார்த்தால் விஎப்எக்ஸில் வந்ததுபோல் தெரிகிறதா? என்று கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.