சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

Filed under: இந்தியா |

கர்ப்பிணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு இருந்ததையடுத்து அந்த சத்துணவு கொடுத்த அங்கன்வாடி மையத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அங்கன்வாடிகளில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட பொட்டலத்தில் சிறிய வகை பாம்பு இறந்து கிடந்ததை பார்த்து அந்த கர்ப்பிணி பெண் அதிர்ச்சியடைந்தார். இதனை தற்போது அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்யப்படுவதாகவும் அங்கன்வாடியில் பணி செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் விசாரணையின் முடிவில் இதற்கான காரணத்தை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.