சத்யராஜ் மெய்யாகவே எம்.ஜி.ஆர். ரசிகரா?

Filed under: சினிமா |

Sathyarajபுரட்சித்தமிழன் சத்யராஜ் இந்தி மற்றும் மலையாளப் படங்களில் கோடி ரூபாய் சம்பளம் வாங்கி நடித்தபின் அவருடைய தமிழ் மொழிப்பற்று காற்றுவாங்கப்போய்விட்டது. அது வியாபாரம். ஆனால் எம்.ஜி.ஆரை நடிகர் ஆர்யாவுக்கு ஒப்பிட்டுப் பேசியதை… புரட்சித்தலைவர் ஆவி மட்டுமல்ல, ரத்தத்தின் ரத்தங்களும் மன்னிக்க மாட்டார்கள். ‘ராஜாராணி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி மாதிரி இப்போது ஆர்யாவும் நயன்தாராவும் உள்ளனர் என்று புகழ்ந்தார். சத்யராஜிக்கு தலையில் முடிகொட்டிவிட்டது. உள்ளேயிருந்த மூளையுமா கொட்டிவிட்டது?
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் ‘ராஜாராணி’ படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, அட்லி கதை வசனம் எழுதி இயக்குகிறார். படத்தின் முன்னோட்ட காட்சியும் திரையிடப்பட்டது