சந்திரசேகர ராவை விமர்சித்த ஷர்மிளா!

Filed under: அரசியல்,இந்தியா |

ஒய்எஸ்ஆர் ஷர்மிளா தெலங்கானாதான் இந்தியாவின் ஆப்கானிஸ்தான் என்றும், கேசிஆர் தான் தலிபான் என்றும் விமர்சனம் செய்துள்ளார். இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷர்மிளா கடந்த சில நாட்களாக தெலுங்கானா அரசை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்து வருகிறார். சமீபத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டார். ஷர்மிளா கூறுகையில், “தெலுங்கானா முதலமைச்சர் என்னை பார்த்து பயப்படுகிறார் என்று இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. எனது நடைப்பயணம் 3000 கிலோமீட்டர் தூரம் கடந்து உள்ளது, சந்திரசேகர் ராவ் தரப்பினர் இதை முறியடிக்க முயற்சி செய்து வருகின்றனர். நான் அரசியலுக்கு வந்து நடைபயணம் தொடங்கியதில் இருந்தே ஆளுங்கட்சி தலைவர்கள் என்னை தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்கள். சந்திரசேகர் ராவ் ஒரு சர்வாதிகாரி, தெலுங்கானா தான் இந்தியாவின் ஆப்கானிஸ்தான்” என்ற அவருடைய இந்த கடுமையான விமர்சனம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.