சன்பிக்சர்ஸ் வெளியிட்ட அப்டேட்

Filed under: சினிமா |

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள “திருச்சிற்றம்பலம்“ என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இப்படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

“திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் தனுஷின் ஜோடியாக நித்யாமேனன், பவானி சங்கர், ராஷிகண்ணா ஆகிய மூன்று கதாநாயகிகள் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி உள்ளார்.
இத்திரைபடத்திற்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு அனிருத் இசையமைத்து வருகிறார். படம் ஜூலை 17ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் நடித்த கேரக்டர்களில் அறிமுகம் நாளை முதல் வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.