சமந்தா குறித்து நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா!

Filed under: சினிமா |

விஜய் தேவரகொண்டா “லைகர்” திரைப்படத்துக்குப் பின் அடுத்த படமாக “குஷி” உருவாகி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் ரிலீசானது. இந்நிகழ்ச்சியின் போது பேசிய அவர் “குஷி” படமும் பேன் இந்தியா படம்தான் எனக் கூறியிருந்தார்.

சமீபத்தில் நடந்த “குஷி” படத்தின் மியூசிக்கல் கான்செர்ட் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் படத்தின் கதாநாயகி சமந்தா ஆகியோர் கலந்துகொண்டு பாடல்களுக்கு நடனமாடினர். அப்போது பேசிய விஜய் தேவரகொண்டா, “சமந்தா இன்னும் முழுமையாக மையோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து குணமாகவில்லை. அவர் ஷூட்டிங்கில் சொல்லமுடியாத அளவுக்கு கஷ்டப்பட்டார். இப்போது அவர் மேல் லைட் பட்டால் எரிச்சல் ஏற்படும், கண்வலி வரும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உங்களுக்காக அவர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்” என பேசியுள்ளார்.