சமுத்திரக்கனி அலுவலகத்தில் மர்ம பெண்?

Filed under: சினிமா |

நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனியின் அலுவலகத்தில் மர்ம முறையில் பெண் நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“நாடோடிகள்,” “போராளி,” “நிமிர்ந்து நில்” உட்பட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் சமுத்திரக்கனி. படங்கள் இயக்குவதோடு மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. இவரது அலுவலகம் மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள அஷ்டலெட்சுமி நகர் 10வது தெருவில் உள்ளது. சமீபத்தில் அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம பெண் ஒருவர் அங்கிருந்த கார் கதவை திறந்து உள்ளே இருந்த மழை கோர்ட்டை எடுத்து அணிந்து சென்றுள்ளார். இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், இதுகுறித்து சமுத்திரகனியின் மேனேஜர் விவேக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சமுத்திரக்கனி அலுவலகத்தில் நுழைந்த மர்ம பெண் யாரென போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.