சமூகவலைதளங்களில் சூர்யா பகிர்ந்த புகைப்படம்!

Filed under: சினிமா |

சமூகவலைதளத்தில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

நடிகர் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான “எதற்கும் துணிந்தவன்” படம் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. இதையடுத்து அவர் இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் நடந்து வருகிறது.

தற்போது சூர்யா கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு தான் நிற்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைபடத்தோடு ‘முதல் முறை’ என்றும் பகிர்ந்துள்ளார். தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் திருவள்ளுவர் சிலை முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.