சவுதி அரேபியாவில் “துணிவு” படத்திற்கு தடையா?

Filed under: சினிமா |

டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணிக்கு நடிகர் அஜீத் நடித்த “துணிவு” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியானது. டிரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான கருத்துக்களை பெற்றது. பழைய திரைப்படங்களில் அஜீத் எப்படி துள்ளலாக ஜாலியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பாரோ அதுபோன்ற ஒரு நெகட்டிவ் ஷேடுள்ள கதாபாத்திரத்தில் இருப்பதை டிரெயிலர் உறுதி செய்துள்ளது.

இந்த டிரைலர் வெளியாகி தற்போது வரை 5 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது. இந்நிலையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் “துணிவு” திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஏன் தடை விதிக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.